அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கரூர்:'அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பயன்பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்ற புதிய திட்டம்,
எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
உணவு பதப்படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், வாடகை கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும். மானியம் மொத்த திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் ஆகும்.
மானிய உச்ச வரம்பு உற்பத்தி தொழிலுக்கு, ஒரு கோடி ரூபாய். சேவை தொழிலுக்கு, 75 லட்சம் ரூபாய் மற்றும் வியாபார தொழிலுக்கு, 50 லட்சம் ரூபாய். மேலும், கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (10 ஆண்டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும், 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவை சேர்ந்த எந்த தனிநபரும் மற்றும் பங்குதாரர், கூட்டாண்மை, தனியார் நிறுவனங்களும், இத்திட்டத்தின் கீழ் பயன்
பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி ஏதுமில்லை. வயது வரம்பு, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்
களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திருப்பரங்குன்றத்தில் முன்பிருந்த நிலையை ஆராய்வோமா?
-
விபூதி, குங்குமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன்
-
காவல் துறையினரிடம் பண மோசடி; இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி 'சஸ்பெண்ட்'
-
ஹார்முஸ் ஜலசந்தியில் 100 நாட்களாக தவிக்கும் 500 இந்திய மாலுமிகள்
-
தேர்தல் நிதியில் பாதி பணம் 'லபக்'; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்
-
திமுக ஆட்சியில் முக்கிய துறைகளில் 'டெண்டர்' முறைகேடு; ஆய்வு செய்ய ரகசிய குழுக்கள் அமைப்பு