குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

கரூர்:கரூர் மாவட்ட புகழூர் தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், முதன்மை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும், அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் உறுதிமொழி
ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Advertisement