ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று மாலை 5:30 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தன. தொடர்ந்து நந்தி தேவருக்கு பாலாபிஷேகமும் சிறப்பு தீபாரதனையும் நடந்தது.

பின், கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதோஷ கால சுவாமிகள் ஊர்வலம் நடந்தது. திருத்தல இசை குழுவினர் இசையுடன் தேவார பஜனை பாடல்கள் பாடப்பட்டன.

திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்மகத்தா வெற்றிவேல் பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

Advertisement