6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

செங்கல்பட்டு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பெற்றோருடன் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு டிச., 30ம் தேதி, சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த தாஸ், 65 என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து விசாரித்த செங்கல்பட்டு மகளிர் போலீசார், தாஸ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, செங்கல்பட்டு ‘போக்சோ’ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். முதியவர் தாஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று, தீர்ப்பளித்தார்.

Advertisement