குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு
அருப்புக்கோட்டை, ஜூன் 13-
அருப்புக்கோட்டையில் கோர்ட் வளாகத்தில் நடந்த குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் 5 நீதிபதிகள் பங்கேற்றனர்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி தயார் செய்யும் எந்த பொருளையும் பயன்படுத்த மாட்டேன் என, உறுதி அளிப்பதான கையெழுத்து இயக்க பேனரில், கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார், சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதிபதி ஜெயபிரதா , கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவல்லி கையெழுத்திட்டனர். இதில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரன், வக்கீல்கள், கோர்ட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
----
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க போலீசாருக்கு கட்டுப்பாடு
-
'ஹார்ட் டிஸ்க்'குகள் திருட்டு; 3 தனிப்படைகள் அமைப்பு
-
மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு
-
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் த.வெ.க., நிர்வாகி கைது
-
டூவீலரில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீது கார் ஏறி பலி: தப்பியோடிய டிரைவர் கைது
-
லாரி டிரைவர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement