கோயில்களில் பிரதோஷ விழா

மானாமதுரை, ஜூன் 13-

மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வளாகத்தை வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் விழா நடந்தது

Advertisement