மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்: அமைச்சர் ஆதவ் நம்பிக்கை
நமது நிருபர்
''மேகதாது அணையை கட்டுவதாக, கர்நாடக அரசு கூறுவது, உச்ச நீதிமன்ற முடிவுகளுக்கு எதிரானது,'' என, அமைச்சர் ஆதவ் கூறினார்.
திருவண்ணாமலையில், அம்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் அதவ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வட மாவட்டங்களில், இன்னும் பல கிராமங்களில், அரசியல் பின்புலத்துடன் சாராயம் விற்கப்படுவதை ஒழிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றி கஞ்சா அதிகரித்துள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்.
மேகதாது அணை விவகாரத்தில், முதல்வர் விஜய் தலைமையில் துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. டில்லியிலும் துறை சார்ந்த வல்லுநர்களுடன், முதல்வர் பேசியுள்ளார். இரு மாநிலங்களும் ஒற்றுமையாக இருப்பதோடு, இரு மாநில விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு.
இரு மாநிலத்திற்கும் இடையே தண்ணீர் பிரச்னை வரும்போது, எவ்வித அரசியலும் இல்லாமல், உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை, ஏற்கனவே வழங்கியுள்ளது. மேகதாது அணையை கட்டுவதாக, கர்நாடக அரசு கூறுவது உச்ச நீதிமன்ற முடிவுகளுக்கு மாற்றான கருத்து. விரைவில், உச்ச நீதிமன்றம் நமக்கு நியாயமான தீர்ப்பை வழங்கும்.
வறட்சி காலத்தில் கர்நாடக எல்லையை விட்டு நமக்கு தண்ணீர் வருவது கிடையாது. இதனால், டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தமிழக உரிமையை, த.வெ.க., அரசும் முதல்வரும், நாங்களும் விட்டு கொடுக்க மாட்டோம். சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றம் சென்று, மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நொய்யல் குறுக்கே பாலம் பணி விரைவுபடுத்த உத்தரவு
-
விளையாட்டு// தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’
-
விளையாட்டு// மாநில மகளிர் கிரிக்கெட் 221 ரன் வித்தியாசத்தில் செங்கல்பட்டு அணி வெற்றி
-
அயநல்லுார் கிராமத்தில் வீடு, கோவிலில் திருட்டு
-
கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
-
சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்