சேர்க்கவும் –––––––––––––––––––––––– பா.ஜ., தொண்டர்களை நம்புவதால் பல மாநிலங்களில் வளர்ந்து வருகிறது மாநில செயற்குழு உறுப்பினர் குப்புராமு
ராமநாதபுரம்:
பா.ஜ., தொண்டர்களை நம்புவதால் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வளர்ந்து வருகிறது, என பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் குப்புராமு தெரிவித்தார்.
ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புராமு தலைமைவகித்து கூறியதாவது: பிரதமர் மோடி நீண்ட கால பிரதமர் எனும் சாதனையை படைத்துள்ளார். ஆரம்ப காலத்தில் மோடி உலகம் சுற்றுவதாக விமர்சிக்கப்பட்டது. அவ்வாறு சென்றதன் பலனை இந்தியா இன்று அனுபவிக்கிறது. போர் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு இல்லை. ஒரு நாட்டில் இருந்து கொள்முதல் தடைபட்டால் வேறு நாட்டில் வாங்கும் அளவுக்கு சக்தி நம்மிடம் உள்ளது. வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட மோடியின் ஆலோசனையை கேட்கின்றனர். காங்., தலைவர்களை நம்பியதால் தோல்வியை தழுவியது. பா.ஜ., தொண்டர்களை நம்பிய கட்சி என்பதால் பல்வேறு மாநிலங்களில் வளர்ந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.