புகழிமலை கோவிலுக்கு சொந்தமான 34 சென்ட் நிலம் அதிகாரிகளால் மீட்பு

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., அம்மாபட்டியில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 34 சென்ட் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலத்தை மீட்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சமீபத்தில் கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றனர்.
இதையடுத்து, நேற்று அம்மாபட்டியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 34 சென்ட் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில், அதிகாரிகள் மீட்டனர். பிறகு, மீட்கப்பட்ட இடத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, சொந்தமான இடம் என போர்டு வைக்கப்பட்டது. அப்போது, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement