குன்னுார் - ஊட்டி பஸ்கள் 'கட்' நீண்ட நேரம் பயணிகள் பரிதவிப்பு

குன்னுார்: குன்னுார் ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு முதல், உள்ளூர் பஸ்கள் முறையாக இயக்காததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 8:40 மணி முதல் 10:15 மணி வரை குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் இயக்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த பயணிகள் போக்குவரத்து கழக நேர காப்பாளரிடம் பயணிகள் கூறுகையில், 'நீதிமன்றத்திற்கு செல்வோர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பணிக்கு செல்வோர் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

உள்ளூர் பஸ்கள் இல்லாததால் சமவெளி பகுதியில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் கூட்ட நெரிசலில் பயணம் செய்த போதும். குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. தினமும், 9:00 மணிக்கு அனுப்ப வேண்டிய தபால் மூட்டைகள், கடந்த, 5 நாட்களாக அனுப்ப முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்,' என்றனர்.

தொடர்ந்து, 10:20 மணிக்கு அரசு பஸ் வந்தபோது, பயணிகள் ஏறி பயணம் செய்தனர். எனவே, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் முறையாக பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement