பெண் அதிகாரியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
விருகம்பாக்கம்: சென்னை மாநகராட்சியின் 128வது வார்டு அலுவலகத்தில், உதவி பொறியாளராக மாலதி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, விருகம்பாக்கத்தில் கடை நடத்தி வரும் பிரகாஷுக்கு, தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 20-க்கும் மேற்பட்டோர், 128வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருகம்பாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். இது தொடர்பாக உரிய மனுவை, மாநகராட்சியிடம் அளிக்கும்படி கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு
-
பி.எஸ்.சி., நர்சிங் நுழைவு தேர்வு ஜூலைக்கு ஒத்திவைப்பு
-
'இண்டி' கூட்டணி தோல்வி ஏன்? இ.கம்யூ., கூட்டத்தில் 'பளீச்'
-
முதல்வர் ரங்கசாமி கவர்னருடன் திடீர் சந்திப்பு
-
காரைக்காலில் தொடர் மின் வெட்டு நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
-
முதல்வருக்கு தபால் அனுப்பிய ஹிந்து முன்னணியினர்
Advertisement
Advertisement