வனத்துறை மெத்தனத்தால் யானை பலி

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே மல்லன் குழி கிராமத்தில், ஒரு பெண் யானை நான்கு நாட்களாக ஊருக்குள் சுற்றி திரிந்தது. நேற்று முன்
தினம் மாலை படுத்து கிடந்தது.

தகவலறிந்த ஜீரகள்ளி வனத்துறையினர் யானைக்கு தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் இறந்து விட்டது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே சாவுக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஊருக்குள் திரிந்தபோதே மயக்க ஊசி செலுத்தி, யானையை பிடித்து சிகிச்சை அளித்திருந்தால் இறந்திருக்காது. வனத்துறையினரின் அலட்சியம் யானையின் உயிரை பறித்து விட்டதாக, மலை கிராம மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement