பி.சி.,-எம்.பி.சி., பிரிவினர் கடன் உதவி பெற அழைப்பு
கரூர்:பி.சி.,-எம்.பி.சி., பிரிவினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர்
முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. சிறு தொழில்கள், தனிநபர் கடன், குழுக்கடன் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர்கல்வியை மேற்கொள்வதற்கான கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, விண்ணப்பதாரர் பி.சி.,- எம்.பி.சி., பிரிவாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும், விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.
இங்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://tabcedco.net இணைய தளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்