ஜெகந்நாத பெருமாள் கோவிலில் 25ல் பிரம்மோத்சவம் தொடக்கம்

திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது, ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு, இந்த ஆண்டு, ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெறும். அன்று மாலை, சுவாமி தங்க தோளுக்கினியான் வாகனத்தில், திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

இதற்காக, நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழாவிற்கு பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.

பிரம்மோத்சவ திருநாளில், தினமும் காலை, மாலை வேளைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, வரும் 27ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் ஜூலை 1ம் தேதி காலையிலும் நடைபெறும். வரும் ஜூலை 3ம் தேதி மாலை, கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவு பெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Advertisement