அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி

சிதம்பரம்: சிதம்பரம் நந்தனார் ஆண்கள் பள்ளியில், பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. நந்தனார் கல்வி கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு, தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொகை வழங்கி பேசினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அமைச்சர் விஸ்வநா தன் பேசுகையில், 'முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி. இப்பள்ளியில் கற்பித்த நல்லொழுக்கத்தால், அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, நந்தனார் கல்வி கழகத்தில், சுவாமி சகஜானந்தா பெயரில் மகளிர் கலைக்கல்லூரி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றார்.

இதில், முன்னாள் குமராட்சி ஒன்றிய சேர்மன் செந்தில்குமார், அண்ணாமலை பல்கலை தேர்வு துறை அலுவலர் குமார், துணை கட்டுப்பாட்டு அதிகாரி ராஜா, தலைமை ஆசிரியர்கள் லதா, எழிலரசி நந்தனார் கல்வி கழக தலைவர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், காங்., மாவட்ட தலைவர் சித்தார்தன், நிர்வாகிகள் மணிமொழி, சவுந்திரபாண்டியன் பாலச்சந்தர், இளைஞர் காங்., முன்னாள் மா நில துணை தலைவர் கமல் மணிரத்தினம், துணைத் தலைவர் அரவிந்த், நிர்வாகிகள் கஜேந்திரன், சகஜானந்தா மணிமண்டப ஒருங்கினைப்பாளர் பாலையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement