கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்

1

கடலுார்: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவரை, குண்டர் தடுப்பு சட்டத்திலும் போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி, அப்பகுதி பஸ்நிறுத்தத்தில் போதைப்பொருட்கள் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில் தஞ்சாவூர், பேராவூரணியைச் சேர்ந்த பாலகுரு மகன் பழனிவேல்,50; என்பவர், 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர். அவரைக் கைது செய்த போலீசார், வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பழனிவேல் மீது பூந்தமல்லி, சென்னை பூக்கடை, தஞ்சாவூர் போலீஸ்நிலையங்களில் கொலைமுயற்சி, கஞ்சா, திருட்டு வழக்கு என மொத்தம், 4 வழக்குகள் உள்ளன.

அவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், பழனிவேலை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள பழனிவேலிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வழங்கி அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement