பழநி கோயிலில் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வார விடுமுறை, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள் வின்ச், ரோப்காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளி பிரகாரத்தில் பிரசாதம், குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டன.

Advertisement