ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
நமது நிருபர்
'அறங்காவலர் பதவி காலியாக உள்ள கோவில்களில், ஆன்மிக சிந்தனை கொண்டவர்களை நியமிக்க வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 214 கோவில்களில் பரம்பரை வழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் அறங்காவலர் என்பவர் திருப்பணிகள், நிதிநிலை, அடிப்படை வசதிகளை முறையாக கவனிப்பவராக இருக்க வேண்டும்.
ஆனால், பல கோவில்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கோவிலின் மரபுகள், பூஜை முறைகள் பற்றி தெளிவில்லை. இவ்விஷயத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல், லஞ்சத்தை புறந்தள்ளி அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நாத்திகவாதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களை நிச்சயமாக நியமிக்க கூடாது. கோவில்கள் என்பது கலாசார மையம். எனவே, கலாசார மரபுகளை உணர்ந்தவர்கள், சமுதாய சேவை பணியில் ஈடுபட்டு வருகிறவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமை நியாயமான கருத்து
இவ்வளவு நாள் இப்படி இல்லை என்பதே வருத்தமாக இருக்கிறது
படிக்காதவர்கள் நீதிபதியாக இருக்க முடியும் என்றால் தான் இப்பொழுது இருக்கும் நடைமுறை சரியாக இருக்கும்
நீதிபதியாக படித்திருக்க வேண்டும் என்றால்
கோவிலில் அறங்காவலராக இருக்க பக்தி இருக்க வேண்டும் என்பது நியாயம் தானே
இதென்ன கையாலாகாத்தனம் .மற்ற மதங்களைப்போல நாங்களும் ஹிந்து மத வழிபாட்டுத்தலங்களை நாங்களே நிர்வகிப்போம் என்று சொல்வதைத்தனே செய்யவேண்டும் .ஏன் அரசிடம் அடகுவைத்து விட்டிர்கள் .
அறையாமையா இல்லை அடிமைத்தனம் இன்னும் விட்டு போகவில்லையா ? சட்டங்களை சொந்தமாகவும் படிக்கமாட்டீர்கள் ,படித்து சொன்னாலும் கேட்கமாட்டீர்கள் .எப்போதுதான் சுயமாக செயல்படுவீர்கள் ?மேலும்
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
-
கிரைம் கார்னர்: கோவை
-
நாளைய மின் தடை :கோவை
-
2037ல் பயணிப்போர் எண்ணிக்கை...1.2 கோடி!: 'டேக் ஆப்' ஆகும் கோவை ஏர்போர்ட்
-
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணி துவங்குவது... எப்போது?:பொதுமக்கள் பாதிப்புக்கு தீர்வு காண கோரிக்கை