நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம்  

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் திறந்து வைத்தார். கலெக்டர் சிவகுருபிரபாகரன், எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். உடற்பயிற்சிக் கூடத்தை பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாத உறுப்பினர் சந்தா ரூ.840, காலாண்டுக்கு ரூ.2268, அரையாண்டுக்கு ரூ.3780, முழு ஆண்டுக்கு ரூ.6048 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

---

Advertisement