தேசியவாத சிட்டிசன் கட்சியுடன் இணையும் திரிணமுல் அதிருப்தி எம்பிக்கள்
புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் குழுவினர் தேசியவாத சிட்டிசன் என்ற கட்சியுடன் இணைந்து பிரதமர் மோடிக்கு ஆ தரவு தரப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. அதிருப்தி குழு தலைவர் ரிட்பிரதா பானர்ஜி, சட்டசபை குழு தலைவராகி உள்ளார்.
அதேபோல், திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் தனிக்குழுவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ககோலி கோஷ் தஸ்திதர் தலைமை வகித்து வருகிறார். இன்று இக்குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். பிறகு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து மனு அளித்தனர்.
இதன் பிறகு ககோலி கோஷ் கூறுகையில், 20 அதிருப்தி எம்பிக்களும், திரிபுராவைச் சேர்ந்த தேசியவாத சிட்டிசன் கட்சியில் இணைந்து செயல்பட போகிறோம். பார்லிமென்டில் தனியாக அமர்ந்து பிரதமர் மோடியின் கீழ் பணியாற்றுவோம் என தெரிவித்தனர்.
அதற்கு முன்னர், மம்தா ஆதரவாளர்கள், சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அதிருப்தி குழுவை அங்கீகரிக்க வேண்டாம் என மனு அளித்திருந்தனர். லோக்சபாவில் திரிணமுல் காங்கிரசுக்கு 28 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 20 பேர் அதிருப்தி குழுவினராக பணியாற்றி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement