மது பாட்டில் வாங்குவதில் தகராறு திருத்தணியில் 4 பேர் படுகாயம்
திருத்தணி: திருத்தணி அடுத்த மத்துார் பகுதியில், அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு, நேற்று மாலை, முருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன், 37, சீனிவாசன், 34, ஆகியோர் சென்றிருந்தனர்.
அப்போது, மேல்முருக்கம்பட்டு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனஸ், 32, சிலம்பரசன், 40, ஆகியோரும், டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.
இரு தரப்பினருக்கும் மது பாட்டில்கள் வாங்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இரு தரப்பினரும், தங்களது நண்பர்களுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்ததால், இரு தரப்பு ஆதரவாளர்கள், 15க்கும் மேற்பட்டோர் மத்துாருக்கு வந்தனர். பின், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, காலி மது பாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், மேற்கண்ட நால்வரும் படுகாயம் அடைந்தனர். மேலும், தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரையும் மிரட்டி ,கையால் தாக்கியதாக கூறப்படுகி றது.
காயமடைந்தவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட் டனர். அங்கு, மருத்துவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
இதில், பச்சையப்பன், சிலம்பரசன் ஆகிய இருவரும், மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும், திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும், மங்காபுரம் மற்றும் முருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி
-
மாவட்டத்தில் பலத்த மழை கெடாரில் 64 மி.மீ., பதிவு
-
ஜென்சி இளைஞர்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்
-
நந்தனார் பட ஊர்வலம்
-
பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்ட பத்திரம் தொலைந்ததால் முடங்கியது முதிர்வுத் தொகை பெற்றோர்கள் பரிதவிப்பு
-
உடைந்ததா கட்சி? சரியான நேரம் வரும் போது பேசுவேன் என்கிறார் உத்தவ் தாக்கரே