தீக்குளித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 32; கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி, 30; இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக அபிராமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 9ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.ஃ
பலத்த தீக்காயம் அடைந்த அவர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார்.
கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement