குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் 23ம் தேதி விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், அன்பழகன் ஆகியோர் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், 37; என்பவரை கைது செய்து, 10 கிலோ 760 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, நாராயணன் மீது வழக்குப் பதிந்து போலீசார் கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது கஞ்சா வழக்குகள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் உள்ளதால் இவரது செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., மதிவாணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நாராயணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார், கடலுார் மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கினர். 

Advertisement