மஹா மாரியம்மன் கோவில் 24ல் மஹா கும்பாபிேஷகம்
திருப்பூர், ஜூன் 22–
திருப்பூர் தெற்கு தாலுகா, உகாயனுார், குருநாதம்பாளையத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
நேற்று முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. சேமலைக்கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், மேள தாள வாத்தியங்கள், வாண வேடிக்கை மற்றும் நடனமாடும் வெள்ளைக் குதிரைகளுடன் மஹா மாரியம்மன் கோவில் வரை கோலாகலமாக நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன; வரும் 24-ம் தேதி காலை 5:45 மணி முதல் 6:45 மணிக்குள் மஹா மாரியம்மன் மற்றும் ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், மஹா மாரியம்மன், கன்னிமார் கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் திருப்பணி மற்றும் விழா குழுவினர்; குருநாதம்பாளையம், சேமலைக்கவுண்டம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
–––
உகாயனுார், குருநாதம்பாளையத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
––
மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு