முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
நமது நிருபர்
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையுலகில் வெற்றிகரமான நடிகராக உச்சம் தொட்டு சாதித்த விஜய், கடந்த 2024 பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் அபாரமான வெற்றி பெற்று, காங்., - வி.சி.க., - கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.
தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை படைத்துள்ள முதல்வர் விஜய், இன்று (ஜூன் 22) 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முதல்வரான பின், வரும் முதல் பிறந்த நாள் என்பதால், இதை பெரும் திருவிழாவாக தவெகவினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து; நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
காங்., எம்பி ராகுல் வாழ்த்து
தமிழகத்தின் முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதிலும் நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன்.
திமுக தலைவர், ஸ்டாலின்
முதல்வர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
வீ தி லீடர்ஸ் நிறுவனர், அண்ணாமலை
தமிழக முதல்வர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் விஜய், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
வண்டலூர் உயிரியல் பூங்கா அரசாங்க சொத்து என்று நான் நினைக்கிறேன்.
முதல்வர் விஜய்-ன் பிறந்த நாளுக்காக நேற்றும் இன்றும் அங்கு இலவச அனுமதியாமே ?
விஜய் அரசாங்கத்திடம் இருந்து அதை எப்போது வாங்கினார் ?
இல்லை, இல்லை, அரசாங்க சொத்தெல்லாம் ஆளுங்கட்சியின் சொத்து என்ற திராவிட சித்தாந்தத்தை மேலும் ஒரு படி எடுத்துச் செல்கிறாரோ ?
இதற்கு முன்பு ஸ்பெசலாக மம்தாவுக்கு எப்போதும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வார் மோடி. இப்ப அதே ஸ்பெசலாக விஜய்க்கு சொல்லி இருக்கிறார். அரசியலில் பிரதமர் ஒருவரை விமர்சிப்பதை விட ஒருவரை வாழ்த்துவதுதான் சற்று ஆபத்தானது.
ரஜினி வாழ்த்தினாரா??
மோடி ஜி ஊருக்கு உழைத்து 51 ஆம் வயதில் முதல்வர் ஆனவர்! - அதிர்ஷ்ட வசமாக முதல்வர் ஆன ஜோசப் விஜய்க்கு 52 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அங்கே ஊருக்கு உழைத்து முதல்வர் ஆனார், இங்கே ஊரை ஏமாற்றி ........
பிரதமரிடமிருந்து விஜய் பிறந்தநாள் வாழ்த்து வாங்கியதுப் போல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதே வாழ்த்தை பிரதமிருந்து வாங்கி இருக்கின்றாரா? ஞாபகமில்லை.
முதல் தேர்தலிலேயே ஹேட்- ட்ரிக் அடித்த முதல் மந்திரி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு