ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உலக யோகாசன தினம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில்,12 வது உலக யோகா தினத்தையொட்டி மாணவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர்.
இங்குள்ள மாருதி உடற்கல்வியியல் கல்லூரி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். இதில், வித்யாலய பள்ளி, கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த, 462க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் உதவி செயலாளர் சுவாமி தத்பாஷானந்தாஜி மகராஜ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், யுவா யோகா நிறுவன இயக்குனர் யுவா தயாளன் பங்கேற்று பேசுகையில், யோகாசனம் மனம், உடல் ஆகியவற்றை வலுப்படுத்தும். தினசரி யோகாசனம் செய்வதால், நம் வாழ்வில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் யோகாசனத்தின் நன்மைகளை எடுத்துக் கூறி, அவர்களையும் யோகாசனத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இணை பேராசிரியர் அமுதன் நன்றி கூறினார்.
நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசன பயிற்சி நடந்தது.
பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சாகுல் மீரான் வரவேற்றார். அனைத்து மாணவர்களும் யோகாசனங்களை செய்து காட்டினர். யுவா யோகா என்ற வடிவில் மாணவர்கள் நிகழ்த்திய யோகாசன பயிற்சி அனைவரையும் கவர்ந்தது. மாணவர்கள் அனைவரும் யோகாசன உறுதிமொழி ஏற்றனர். மாணவப் பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். துணை முதல்வர் சுருதி நன்றி கூறினார்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு