சுற்றுலா பயணிகளிடம் தகராறு நான்கு பேர் மீது வழக்கு பதிவு
மூணாறு, ஜூன் 23-
வாகனங்கள் உரசிய சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் காரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பழைய மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போ அருகே குஞ்சுதண்ணி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த காரும், ஓமான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாடகை காரும் எதிர்பாராத வகையில் உரசிக் கொண்டன.
அப்போது மது போதையில் இருந்த குஞ்சுதண்ணியை சேர்ந்த நான்கு பேரும் காரில் இருந்து இறங்கி, சுற்றுலா காரை வழி மறித்து நிறுத்தி டிரைவருடன் தகராறில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நான்கு பேரையும் சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு பேரும் மதுபோதையில் இருந்ததால் பயணிகளின் பேச்சை கேட்கவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மூணாறு போலீசார், நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜாமினில் செல்ல அனுமதித்தனர்.
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்