பள்ளிகளில் யோகா தினம்  மாணவர்கள் விழிப்புணர்வு

உடுமலை: சர்வதேச யோகா தினத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், யோகாசன பயிற்சிகளை மாணவ, மாணவியர் மேற்கொண்டனர்.

உடுமலை அருகே கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், யோகா தினத்தையொட்டி, ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவ, மாணவியர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

குரு வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது; 12 வகையான யோகாசனங்களை மாணவ, மாணவியர் செய்தனர். மனநலம், உடல்நலத்தின் முக்கியத்துவம், அதற்கு யோகாசனம் எவ்வாறு துணை புரிகிறது என்பது குறித்து பயிற்சியாளர் குணசேகரன் விளக்கமளித்தார். பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* உடுமலை ஆர்.கே.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.கே. ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார்.

பள்ளி முதல்வர் வசந்தி வரவேற்றார். உடுமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள், யோகாவின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

* உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார். பள்ளிச்செயலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

திருமூர்த்திமலை உலக சமாதான ஆலய குருமகான் பரஞ்ஜோதியார், யோகாவின் சிறப்புகள் குறித்து பேசினார். மாணவ, மாணவியர் பல்வேறு யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement