போலியோ சொட்டு மருந்து முகாம்

ராமநாதபுர்: நாடு முழுவதும் போலியோ செட்டு மருந்து முகாம் ஜூன் 28 ல் நடக்கவுள்ளது. இதில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுகடன் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு நடத்தினார்.

இதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை வீடு தேடி சென்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

––

Advertisement