கைவிடப்பட்ட தொட்டி: வீணாகும் அரசு நிதி

சிங்கம்புணரி:சிங்கம்புணரி பகுதி ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணாகிறது.

இவ்வொன்றியத்தில் 30 ஊராட்சிகளில் மேல்நிலை நீர் தொட்டிகள் கட்ட முடியாத அல்லது அதன் மூலம் தண்ணீர் செல்ல முடியாத இடங்களில் 500 முதல் 1000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட சிறிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தொட்டி அருகே போர்வெல் அமைக்கப்பட்டும் தனி மின் இணைப்பு பெறப்பட்டும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

சில ஆண்டுகளாக இத்தண்ணீர் தொட்டிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. மோட்டார் பழுது, போர்வெல் பழுது, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் இவை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் இத்தொட்டிகளை நம்பி இருந்த மக்கள் சிரமப்படுகின்றனர். மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியும் பல கி.மீ., டூவீலர்களில் சென்றும் தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement