பணம் திருட்டு
மேலுார்: மணப்பட்டி விவசாயி பாண்டியம்மாள் 59. அரசு பஸ்சில் மேலுாரில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றார். சரக்கு பையில் மஞ்சப்பையில் ரூ.91 ஆயிரத்து 500 மற்றும் அலைபேசி வைத்திருந்தார். மேலுார் பஸ் ஸ்டாண்டில் வந்து பார்த்தபோது திருடு போனது தெரிந்தது. எஸ்.ஐ., கார்த்திக் விசாரிக்கிறார்.
கஞ்சா விற்ற 6 பேர் கைது
மேலுார்: எஸ்.ஐ., ராஜேந்திரன் சுக்காம்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்ற மலம்பட்டி முனியாண்டி 18, ஆனந்த் 22, சதீஷ் 20, மேலுார் ஜெய்தீப் 19, எட்டிமங்கலம் பிரகதீஸ்வரன் 20, அ.வல்லாளபட்டி உசேன் 28, ஆகியோரை கைது செய்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விவசாயி பலி
கொட்டாம்பட்டி: சேக்கிபட்டி விவசாயி சேகர் 72. ஜூன் 21 இரவு நண்பர் குரு சிவனுடன் டூவீலரில் குன்னாரம்பட்டிக்கு சென்றார். குரு சிவன் ஓட்டினார். எம்.வெள்ளாளபட்டி அருகே பின்னால் வந்த வாகனம் மோதியதில் சேகர் இறந்தார். குரு சிவன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மனைவியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை; கணவர், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு
-
துாத்துக்குடி யில் திடீர் சூறைக் காற்று: 100 வீடுகள் சேதம் அரிதான நிகழ்வு என வானிலை மையம் விளக்கம்
-
மாணவர்களின்றி 7.. ஒரே மாணவருடன் 4; மூடும் நிலையில் தேனி அரசு பள்ளிகள்
-
மகளுக்கு தொல்லை தந்த சித்தப்பாவுக்கு 'போக்சோ'
-
ரேஷனில் தே.எண்ணெய் வழங்கக்கோரி போராட்டம்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை