இளைஞருக்கு மிரட்டல்

காரைக்குடி:பள்ளத்துாரில் அரிசி ஆலை நடத்தி வருபவர் வெங்கடேஷ் 37. இவரது அரிசி ஆலையில் சில தினங்களுக்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தனது அரிசி ஆலை குறித்து பள்ளத்துார் கீழக்குடியிருப்பைச் சேர்ந்த வேலு 28 என்பவர் தான் புகார் அளித்ததாக கூறி அவரது மாமியார் மீனா வீட்டிற்கு சென்று, அரிசி ஆலை தொடர்பாக இனி தலையிட்டால் வேலுவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் துாசியால் சுகாதாரத் கேடு நிலவுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்ததாகவும் இதனால் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாகவும் பள்ளத்தூர் போலீசிடம் வேலு புகார் அளித்தார். போலீசார் அரிசி ஆலை உரிமையாளர் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement