பல்லாங்குழியான பாலாற்று பாலம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது.
இதில் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் -- இருங்குன்றம்பள்ளி இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தின், பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக, பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். மேலும் பாலத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் மணல் திட்டுகளாலும், விபத்து ஏற்படுகிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு