வாசகர் வட்ட கூட்டம்   

சிவகங்கை, ஜூன் 23-சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். மாவட்ட நுாலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலை வகித்தார். நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். புலவர் பகீரத நாச்சியப்பன், மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், பேராசிரியர் சேவியர், செல்லமணி, சேவுகன், கோவிந்தன் பேசினர்.  நுாலகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினர். நுாலகர் வெள்ளைச்சாமி கண்ணன் நன்றி கூறினார். ///

 

Advertisement