சீமைக்கருவேல மரங்களை அகற்ற கணக்கெடுக்கும் பணி துவக்கம்
போடி:கண்மாய், அரசு புறம்போக்கு, தனியார் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
கண்மாயில் வளர்ந்து உள்ள சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழல், கால்நடைகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கண்மாய், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்ற ஊராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்க வேண்டும். நில உரிமையாளர்கள் அகற்றாத போது ஊராட்சி நிர்வாகமே அகற்றி விட்டு அதற்கான செலவு தொகையினை இரட்டிப்பாக நில உரிமையாளர்களிடம் ஊராட்சி நிர்வாகம் வசூலித்து கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை 10 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. அப்போது ஊராட்சி நிர்வாகம் பெயரளவிற்கு சீமைக் கருவேல மரங்களை அகற்றின. அதன் பின் அகற்ற நடவடிக்கை இல்லை. தற்போது மதுரை உயர்நீதி மன்ற கிளை சீமைக்கருவேல மரங்களை அகற்ற மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. இதனை ஒட்டி கண்மாய், ஆறு, வாய்க்கால், ஓடை, நீர் நிலைகள், அரசு புறம் போக்கு நிலங்கள், பராமரிப்பு இன்றி தனியார் பட்டா நிலங்களில் வளர்ந்து உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான கணக் கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு