எச்.எம்.எஸ்., சங்கக் கூட்டம்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மதுரை கோட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.

தலைவர் ரவி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கண்ணன், சேதுராமன், ஒச்சாத்தேவன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் ஷாஜஹான் தீர்மானங்களை விளக்கினார்.

மழைநீர் வடியும் அளவு மேற்கூரை பழுதான பஸ்களை கண்டறிந்து, அவற்றை மாற்ற நடவடிக்கை வேண்டும். அனைத்து பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக உள்ளது. உடனே தார் ரோடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் நலன்கருதி ஓய்வறைகளை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு போதுமான அளவு பஸ்களை மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி வரை இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement