சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மச்சேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாவாடை விளக்க உரையாற்றினார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, இணை செயலாளர்கள் கருணாகரன், புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார்.

மாநில செயலாளர் பழனி, மாவட்ட செயலாளர் காசிநாதன், மாநில துணை செயலாளர் நடராஜன் வாழ்த்தி பேசினர். மாநில பொருளாளர் ராமநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட தலைவர் மனோகரன் நிறைவுரையாற்றினார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவபடி, மருத்துவ காப்பீடு, அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஷீலா அன்பழகி நன்றி கூறினார்.

Advertisement