ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு
நாமக்கல்; 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தில் பணி-யாற்றும் சுகாதார பெண் தன்னார்வலர்கள், ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி, சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் நல்-வாழ்வுத்துறையின், 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தில், 8,713, ஆரம்ப சுகாதார நிலையத்தில், 13,225 பெண் தன்னார்வலர்கள், பி.பி., சுகர் பரி-சோதித்து மருந்து பெட்டகம் வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியில், ஐந்தாண்டுகளாக, 5,500 ரூபாய் மாத ஊக்கத்தொகை பெற்று பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசு இதுவரையிலும், 13,225 சுகாதார பெண் தன்னார்-வலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதனால், ஏழை, எளிய, இளம் பெண் ஊழியர்கள், குடும்ப பொருளாதாரநிலை காரணமாக, கடும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, அத்தியா-வசிய உணவப்பொருள் விலை உயர்வு மற்றும் கல்வி, மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடி-யாமல், மிகுந்த போராட்டத்தை நடத்தி வருகின்-றனர். அதனால், பெண்கள் நல அரசாக தங்களை அடையாளப்படுத்தும் தமிழக அரசு, உடனடியாக மாதம் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். பணி உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த, நான்கு மாதங்களாக ஊதியம் வழங்க-வில்லை. ஊதியம் வராததால், ஊழியர்கள் குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்-டாடி வருகின்றனர். மேலும், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நிர்வாகத்தின் நடைமுறைக்கு மாறாக ஊழியர்கள் மீது வேலைப்பளு அதிகரிப்-பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு