முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
ப.வேலுார்; ப.வேலுார் பொதுப்பணித்துறை சார்பில், ஆண்டுதோறும் ராஜ-வாய்க்கால்
துார்வாரும் பணிக்காக தண்ணீர் நிறுத்துவது வழக்கம். இதற்காக, ஆலோசனை கூட்டம், விவ-சாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் தேதி அறிவிக்-கப்படும்.
ஆனால், நடப்பாண்டு விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், ப.வேலுார் நீர்வளத்-துறையினர் தன்னிச்சையாக, கடந்த, 17ல் ராஜ-வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தினர். இதனால் ராஜவாய்க்கால் கரையோர பகுதிகளில் சாகுபடி செய்துள்ள வாழை, வெற்றிலை பயிர்கள் பாதிக்-கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்ப-குதி மக்களின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து, ப.வேலுார் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர் குப்புதுரை, பொத்தனுார் பாசன விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் வெளி-யிட்ட அறிக்கை:
ப.வேலுார் ராஜவாக்கால் மற்றும் கிளை வாய்க்-கால்கள் பொய்யேரி, குமார
பாளையம், மோகனுார் வாய்க்கால்கள் ஆண்-டுக்கு, 350 நாட்கள் தண்ணீர் காவிரி
யில் இருந்து எடுக்க உரிமை உள்ள வாய்க்கால் ஆகும். ஆனால், தற்போது ராஜா வாய்க்காலில் முன்னறிவிப்பு இன்றி நீர்வளத்துறையினர் தண்ணீர் நிறுத்தியுள்னர். மேற்படி வாய்க்காலில் வாழை, கோரை, வெற்றிலை, கரும்பு பயிரிடப்-பட்டுள்ளது. 20,000 ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், முறைகேடாக அனுமதியின்றி காவி-ரியில் நீரேற்று பாசன சங்கங்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதை அதிகாரிகள் கண்டுகொள்வ-தில்லை. மேலும், நீரேற்று பாசன சங்கங்களில் மின்சாரத்தை துண்டித்து உரிமையுள்ள வாய்க்கால் விவசாயிகளுக்கு தண்ணீர் தர வேண்டுகிறோம். தொடர்ந்து ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட காலதாமதம் ஏற்பட்டால், தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி போராட்டம் நடத்த நேரிடும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு