மின் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்த போராட்டம்
ஓமலுார்; நேரடியாக தினக்கூலி அடிப்படையில் பணிய-மர்த்த கோரி, மின் ஒப்பந்த தொழிலாளர் கூட்ட-மைப்பினர், பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், மின்துறையில் ஒப்பந்த பணியாளர்களாக, 1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்-றனர். ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்படு-கிறது. சேலம் மாவட்டம், நங்கவள்ளியில், தமிழ்-நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த
தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில். 500 பேர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள், பணியை புறக்கணித்து போராட்டத்தை
துவக்கினர்.
கூட்ட முடிவில் மாநில தலைவர் மகேந்திரன் கூறியதாவது:
மின்வாரிய துறையில், புதிதாக பணியமர்த்தப்ப-டவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளாக, பல பேரிடர் காலத்திலிருந்து நாங்கள் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரு-கிறோம். மின் வாரியம் மூலம், எங்களுக்கு நேர-டியாக தினக்கூலி சம்பளம் வழங்க வேண்டும். படிப்படியாக எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணியை புறக்-கணித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
சேலம் உட்பட, 7 மாவட்டங்களில் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை குறித்து மின்வாரியத்துக்கு அனுப்பியுள்ளோம். இன்று (நேற்று) 500 பேர் போராட்டத்தில் பங்கேற்-றுள்ளனர். நாளை அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு