கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கெங்கவல்லி; பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, தெடாவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன், விவசாயிகள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி அருகே, தெடாவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன், நேற்று அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலை-மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, த.வெ.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, விவசாயிகளுக்கு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வதற்கு, முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கறவை மாடுடன், கண்டன கோஷம் எழுப்பினர். விவ-சாய பிரதிநிதிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனு-மதி மறுத்த நிலையில், போராட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* பயிர் கடனை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகராஜ் தலைமையில், நேற்று நவப்-பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரு ஊராட்சிகளை சேர்ந்த, 80 விவசாயிகள்
பங்கேற்றனர்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு