வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

சூளகிரி; பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் திரிபுவன்குமார், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்ப-டியில் உள்ள, 'மகாலட்சுமி புளு மெட்டல்' என்ற நிறுவன கல்குவாரியில், வெல்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த, 20ம் தேதி இரவு தன் நண்பருடன் மது அருந்தினார். இரவு, 11:25 மணிக்கு, அவரது நண்பர் சோனு என்பவர், சப்படியில் உள்ள சாதப்பா என்பவரது நிலத்தின் அருகே திரிபுவன் குமாரை இறக்கி விட்டு சென்றார்.
இயற்கை உபாதையை கழிக்க சென்ற அவர், அப்பகுதியில் மின்சாரம் கசிந்து கொண்டிருந்த கம்பியை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்-பவ இடத்திலேயே பலியானார்.
சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement