அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், அதிக ஒலி எழுப்பும் வகையில், ஏர் ஹாரன் மற்றும் கண் கூசும் எல்.இ.டி., பல்புகளுடன் சென்ற வாகனங்களை மடக்கிய போக்குவரத்து போலீசார், அந்த வாக-னங்களுக்கு அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி-களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன், இசை-யுடன் கூடிய ஹாரன்கள் மற்றும் கண்களை கூசும் வகையில் அமைத்த எல்.இ.டி., பல்புகள் பொருத்-திய வாகனங்களை நிறுத்தி, அவற்றை அகற்-றியும், அபராதம் விதிக்கவும், மாவட்ட எஸ்.பி., அனிதா உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று மதியம் முதல், கிருஷ்ண-கிரி டிராபிக் எஸ்.ஐ., ஜோதி பிரகாஷ் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்-பாலம், ஆவின் மேம்பாலம், ஐந்துரோடு ரவுண்-டானா உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் மற்றும் கண் கூசும் வகையில், எல்.இ.டி., பல்புகளுடன் சென்ற வாக-னங்களை பிடித்து, அவற்றை அகற்றி, வாகனங்-களுக்கு அபராதம் விதித்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில் இதுவரை அதிக ஒலி எழுப்-பிய, 7 வாகனங்களின் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்-ளது. கண் கூசும் வகையில், விதிகளுக்கு மாறாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்திய வாகனங்க-ளுக்கு, 500 முதல், 1,000 ரூபாய் வரை, அபராத தொகை வசூல் செய்து, எச்சரிக்கை விடுத்-துள்ளோம். அதேபோல டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துவது, அதிவே-கத்தில் அஜாக்கிரதையாக வாகனங்கள் ஓட்-டுவோர் மீதும், வழக்குகள் பதியப்படும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு