மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
அரூர்; அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்-ளியில், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்டத்துடன் இணைந்து அனைத்து மாணவ, மாணவியரும், 'போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை, நான் முழுமையாக அறிவேன். போதைக்கு ஆளாக மாட்டேன்.
என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் வழியே போதை பொருட்-களை தமிழகத்தில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்' என, உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாரதிதாசன், கலெக்டர் அலுவலக உதவியாளர் செந்தில் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement