பள்ளிகள் த.வெ.க.,வின் விளம்பர கூடங்களா? தமிழக பா.ஜ., கேள்வி
சென்னை : 'அரசு பள்ளிகள், த.வெ.க.,வின் அரசியல் விளம்பரக் கூடங்களா' என, தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
அதன் அறிக்கை: அரசு பள்ளிகள், த.வெ.க.,வின் அரசியல் விளம்பரக் கூடங்களா? காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள், மாணவர்களுக்கு பாடம் எடுத்து, த.வெ.க., நிர்வாகிகள் 'ரீல்ஸ்' வெளியிட்டு உள்ளனர்.
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, த.வெ.க., நிர்வாகிகள் மருத்துவ முகாம் நடத்தி உள்ளனர்.
திருவாரூர் குன்னலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், த.வெ.க., நிர்வாகிகள், திடீரென புகுந்து ஆய்வு செய்துள்ளனர். பள்ளிகளில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என, விதிகளை த.வெ.க.,வினர் மீறுவது சரியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement