திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வா? உயர்த்தவே இல்லை என்கிறார் அமைச்சர் ரமேஷ்
திருவள்ளூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: திருச்செந்தூரில் கட்டணம் உயர்த்தவே இல்லை. அங்கே 20க்கும் மேற்பட்ட சேவைகள் இருக்கிறது. அதே கட்டணத்தில் தான் நீடிக்கிறது. நிர்வாக ரீதியாக அங்கே சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வைத்து இருந்தனர். அதற்கான பொதுமக்களின் கருத்துகேட்பு நடத்தப்பட்டது.
கருத்து மட்டும் தான் கேட்கப்பட்டு இருக்கிறது. கட்டணம் எல்லாம் உயர்த்தவில்லை. நிறைய இடங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. பொதுமக்கள் கருத்தில் இதை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் உயர்த்தமாட்டோம். பொதுமக்களின் கருத்தை தாண்டி இந்த அரசு எந்தவித முடிவையும் எடுக்காது. பொது மக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி தான் இந்த அரசு நடக்கும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் உண்டியல் வருமானம் ஆண்டுதோறும் பலமடங்கு உயர்ந்து வரும் நிலையில், விலைவாசியை காரணம் காட்டி, தேவை இல்லாமல் கட்டணச் சீட்டுக்கள் மீதான கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை திமுக அரசு நியமனம் செய்து, தற்போது வரை பதவியில் நீடிக்கும் அறங்காவலர் குழு, எனது வழி தனி வழி என்று முடிவு எடுக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.
கட்டண உயர்வு என்று தினமலர் தான் செய்தி வெளியிட்டது, இப்போது மாத்தி செய்தி போடுறீங்க, எப்படி நம்புறது
இப்போதைய அறம்கெட்டத்துறையின் அமைச்சனும் தீவிர திராவிஷக் கிருமிதான்... கோவில் கொள்ளை இன்னும் பயங்கரமா இருக்கும்...
கொள்ளைக்கார சேகர்பாபுவே பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருக்கப்போகிறது வெட்டிக் கழக ஆட்சி...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல சிறப்பு தரிசன மற்றும் சேவை டிக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத் துறை HR&CE இணையதளத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை. அதேபோல் பழனி முருகன் கோவிலிலும் பல டிக்கெட்டுகள் அர்ச்சகர்கள் மற்றும் சில அதிகாரிகளின் உதவியுடன் கருப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பக்தர்களிடையே தொடர்ந்து எழுந்து வருகின்றன.
அனைத்து டிக்கெட்டுகளும் வெளிப்படையான முறையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டால், பக்தர்கள் சமமான வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் கருப்புச் சந்தை, முறைகேடு, மற்றும் இடைத்தரகர் பிரச்சினைகளும் குறையும்.
எனவே, அனைத்து சிறப்பு தரிசன, அபிஷேக, அர்ச்சனை மற்றும் சேவை டிக்கெட்டுகளையும் பொதுமக்கள் நேரடியாக முன்பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் எப்போது முழுமையாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன என்பது பக்தர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.மேலும்
-
அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்: இஸ்ரேல் அமைச்சர் பிடிவாதம்
-
திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு
-
பனிக்காலம் முடிந்து வசந்த காலம்; வைகோ சூசகம்
-
சராசரியாக படிக்கும் மாணவரையும் அரவணைத்து செல்லுங்கள்; ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
-
குற்றத் தடுப்புக்குஆல்பா டீம்
-
அதிகாரிக்கு அபராதம்