ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்; இந்தியா எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களை வலியுறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் மூன்று மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவுரை வெளியாகியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரான் அரசில் நிலவும் பாதுகாப்புச் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்திய சூழலை கருத்தில் கொண்டு, ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் இந்திய மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஈரானிற்கு பயணம் செய்ய திட்டமிடும் இந்தியர்கள், டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் தேவையான அறிவுறுத்தல்கள் பெற
தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
தற்போது ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும், ஈரானுக்கு வரவிருப்பவர்களும், கூடிய விரைவில் தங்கள் விபரங்களை தூதரகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்