கடற்படையின் திறன்கள் இனி கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கும்; வட கொரியா அதிபர் திட்டவட்டம்
நமது நிருபர்
கடற்படையின் திறன்கள் இனி கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பமுடியாத ஒன்றாக இருக்கும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவ நடவடிக்கைகள் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு தள்ளுவதாகக் கூறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதையொட்டி, வடகொரியாவின் ராணுவ பலத்தை மேலும் தீவிரமாக அதிகரிக்கவும், அணுசக்தி படைகளை விரிவுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு துறைமுகமான நம்போவில், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலான சோ ஹியோனை இயக்கி உள்ளது. இந்த அழிப்புக் கப்பல் முறையாக சேவையில் இணைவதற்கு முன்பு, கடந்த 14 மாதங்களாக ராணுவ செயல்பாட்டு சோதனைகளை நிறைவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு 5,000 டன் வகை போர்க்கப்பல்களில் இந்த அழிப்புக் கப்பலும் ஒன்றாகும்.
இது குறித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது: 5,000 டன் எடை கொண்ட சோய் ஹியோன் என்ற போர்க்கப்பலைப் போன்ற இரண்டு போர்க்கப்பல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்ட வேண்டும். நாட்டின் கடற்படை அணு ஆயுதமயமாக்கல் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருகிறது. கடற்படையின் திறன்கள் இனி கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பமுடியாத ஒன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பக் பக் என்று இருக்கிறது. டிரம்பைப்போல இதுவும் யார் மீது என்ன செய்யலாம் என்றுதான் இருக்கிறது. இதுவரையில் ஒன்றும் செய்யவில்லை. இனி வரும் நாட்களில் எப்படியோ?மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்