சராசரியாக படிக்கும் மாணவரையும் அரவணைத்து செல்லுங்கள்; ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
பெரம்பலுார்: ''அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் அரவணைத்து செல்லுங்கள்,'' என, பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். '
அரசு பள்ளிகளில் பயின்று, 10 மற்றும், 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, பரிசு வழங்கி பாராட்டினார். அதன்பின் அவர் பேசியதாவது:
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, ஆசிரியர்களிடம் தங்களது குழந்தைகளை வாழ்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வகுப்பறையில் விட்டு செல்வார்கள்.
இதனால், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு குழந்தையையும் வெற்றி பெற வைக்கும் கடமை உள்ளது. வகுப்பறையில் ஆசிரியர்கள் குறைவாக பேசி, மாணவர்களை அதிகமாக பேச வைக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் செயல்பாட்டினையும், நன்கு கவனிக்க வேண்டும். குறிப்பாக முதல் பெஞ்சில் உள்ள மாணவர்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள், கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்கள், எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லமாட்டார்கள், அமைதியாக இருப்பார்கள்.
ஆகவே அனைத்து மாணவர்களின் செயல்பாட்டினையும் கவனித்து, அவர்களுக்கேற்ப வகுப்புகளை வழிநடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்கள் அரவணைக்க வேண்டும். கற்கும் திறன் குறைந்த குழந்தைகளை, தமிழில் 'மெல்லக் கற்கும் குழந்தை' என உள்ளது. நான் அந்த வார்த்தையை 'தன்வேகத்தில் கற்கும் குழந்தை' என மாற்ற சொல்லியுள்ளேன். அப்படிப்பட்ட குழந்தைகள் தான், உலகத்தையே மாற்றியுள்ளார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், போன்ற விஞ்ஞானிகள் ஹோம் ஸ்கூலிங் முடித்து உலகத்தையே புரட்டி போட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
அதான் ஆல் பாஸ் போட்டு இருக்கு,, இன்னும் எவ்ளோ முடியுமோ செய்ங்க
கல்வியே ஆயுதம், கல்வியே ஒரு மாணவனை முன்னேற்றும் என்று அரசும் தனியார் நிறுவனங்களும் கல்விப் பணியாற்றி வருகின்றன. ஆனால் ஆசிரியர்களின் பணி இப்போது மிகவும் கடினமாகிக் கொண்டிருக்கிறது. காரணம் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் இன்று ரீல்ஸ் மோகத்தில் விழுந்து பள்ளிக்கூடத்தையும், ஆசிரியர்களையும் மதிப்பதில்லை. படிக்கும் ஆர்வத்தில் பெண்களின் சதவிகிதம் சுமார் எண்பது என்று கூறலாம். ஆனால் ஆண்களில் சுமார் நாற்பது சதவிகித மாணவர்கள் கூட கல்வியில் ஆர்வமில்லை. அதனால் வகுப்பறைகளையும் பள்ளிகளையும் பொழுது போக்குமிடமாக மாற்றி வருகிறார்கள். பெற்றோர்களால் தங்களின் பிள்ளைகளை முக்கியமாக ஆண் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக பள்ளிகளில் அந்த நிர்வாகம் கொடுக்கும் பலவிதமான பயனுள்ள ஆளுமை பயிற்சிகளில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்வதில்லை. அதை பயனுள்ளதாக எடுத்துக் கொள்ள மாணவர்கள் தயாராக இல்லை. பாட்டு, நடனம், விளையாட்டு மற்றும் பிக்னிக் இவை மட்டுமே மாணவர்களுக்கு பிடித்ததாக இருக்கிறது. திறன்வளர்ப்பு நிகழ்ச்சிகளில் சிலர் மட்டுமே பங்கேற்கின்றனர். அப்படி பங்கேர்ப்பவர்களை நக்கல் நையாண்டி செய்கிறார்கள். கடைசியில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி சரியாக வளர்க்கவில்லை என்று திட்டுகிறார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனத்துடன் படிப்பதில்லை. மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களை பள்ளியின் மூலம் கேட்பதற்கு தயாராக இல்லை. பெற்றோர்களை கூப்பிட்டு இவற்றைக் கூறினால் ஆசிரியர்களிடமும் முதல்வரிடமும் சண்டை போடுகிறார்கள். விளங்குமா ? சரி அடுத்து நிர்வாகம் சரியான சம்பளம் கொடுப்பதில்லை, சம்பளம் கொடுத்தால் கூடுதல் சலுகைகள், பாராட்டுகள் என்று ஆசிரியர்களை ஊக்குவிப்பதில்லை. ஆசிரியரின் பணிச்சுமை நாளுக்கு நாள் கடினமாக மாறிக் கொண்டிருக்கிறது. பள்ளிகளும் ஆசிரியர்களும் சராசரியல்ல நன்றாக படிக்காத மாணவர்களிடமும் அன்பு செலுத்தி வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முன்பு சொன்னது போல அட்டகாசம் செய்யும் மாணவர்கள் மாட்டிக் கொண்டவுடன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்வது ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைக்கவில்லை என்பது ஆகாது. அவர்களுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். இதனால் இப்போது சில ஆசிரியர்கள் இப்படி அட்டகாசம் செய்யும் மாணவகளை கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை.
படிக்காதமானவர்களை என்ன பண்ணமுடியும் , கொடுக்கற சம்பளத்துக்கு நியாயமாக என்ன செய்யமுடியுமோ அதைத்தான் ஆசிரியர்கள் செய்யமுடியும் , நீங்கள் என்ன OTkku காசகொடுக்குறீர்கள்
சட்டசபையில் கூட, முதல் வரிசை பெஞ்சில் அமர்ந்து கொண்டு நீங்கள் தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறீகள்.
பேச வேண்டிய இடம் சட்டசபை என்று அறிவிலிகளுக்கு தெரியாது
மாணவர்களுக்கு இப்போதிருக்கும் பாடத்திட்டங்களை அவர்களின் திறமைக்கேற்ப கண்டறிந்து அந்தந்த திறன்களை வளர்ர்க்கும்படி மாற்றியமைக்கவேண்டும் . எல்லோரும் ஒரே மாதிரியான பாடங்களை படிக்கும்கட்டாயத்தினால்தான் இடை நிறுத்தம் ஏற்படுகின்றது .இதை 8 ஆம் வகுப்பிலிருந்து அவர்களின் ஆர்வங்களை கண்டறிந்து அதைஊக்குவிக்கவேண்டும் .அவர்களின்திறமையின் ஆர்வத்திற்க்கேற்ப சிறப்பு பள்ளிகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் .அப்போது தான் இதைநிறுத்தம் தவிர்க்கப்படும் .மாறுபட்ட திறன்கள் வளரும் .
மொதல்ல tet தேர்வு ஊழல்ல கண்டுபுடுச்சு தகுதியற்ற ஆசிரியர்களை வெளியேற்றவும் 10த் அட்டெம்ப்ட் 12 அட்டெம்ப்ட் UG அட்டெம்ப்ட் bed அட்டெம்ப்ட் அப்பரும் ஏற்பாடு TET எக்ஸாம்ல மட்டும் topper எல்லாம் அண்ணாமலைக்கு தெரியும் நன் சொன்னது சிதம்பரம் அண்ணாமலை ப க + கோச்சிங் சென்டர் பல குட்டி அப்பன்ஸ்மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்