மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது

கண்ணகி நகர்: கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா, போதை மாத்திரை விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு, நேற்று சோதனை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராதா, 35, அருண், 23, அரவிந்த், 25, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தன ர்.

மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர் களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement